NPP அரசாங்கத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி அளித்தார்களா? அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் மறுப்பு

#SriLanka #Fund #Diaspora #NPP #ADDA #Archuna #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa
Thamilini
2 hours ago
NPP அரசாங்கத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி அளித்தார்களா? அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் மறுப்பு

தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரசாரத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது. 

இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இதேவேளை  அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா எம்.பி. வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இது தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 இச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!