சிறுவர்களுடன் தொடர்புடைய அரசுப் பணிகளுக்கு புதிய சான்றிதழ் நடைமுறை

#SriLanka #children #government #LANKA4 #certificate #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
சிறுவர்களுடன் தொடர்புடைய அரசுப் பணிகளுக்கு புதிய சான்றிதழ் நடைமுறை

அரச சேவையில் இணையும் போது, குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் ஈடுபடவுள்ள நபர்கள் சிறுவர் தொடர்பான குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்லர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை ஆரம்பிக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ், சிறுவர்களை அணுகக்கூடிய மற்றும் அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கக் கூடாது என்பதே இந்த நடைமுறையின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.

அத்துடன், ஏற்கனவே அரச சேவையில் உள்ளவர்களும் தங்களது சேவை இடைநிலைகளின் போதும், சம்பள உயர்வுகளைப் பெறும் சந்தர்ப்பங்களிலும் குறித்த சான்றிதழை புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த நபர் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடையவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சான்றிதழ் அவசியம் எனவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4