தெருநாய்களால் அதிகரிக்கும் வீதி விபத்துகள்!

#SriLanka #Accident #Road #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
தெருநாய்களால் அதிகரிக்கும் வீதி விபத்துகள்!

இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதம் வீதிகளில் வசிக்கும் நாய்களால் ஏற்படுவதாக விலங்கு தொகையை மனிதநேயத்துடன் முகாமைத்துவம் செய்வதற்கான கால்நடை மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு விசர்நாய் கடி நோய் தடுப்பூசி வழங்குவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடுவதாகவும் அந்த அமைப்பின் நிறுவுனர் மருத்துவர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் முறையற்ற கழிவு முகாமைத்துவம் முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலங்கு தொகை முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டமூலம் மூலம், தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சைகளை வழங்குவதுடன், அவற்றை முறையாகப் பராமரிப்பதற்கும் நீண்டகால தீர்வை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4