குழந்தைகள் தொடர்பான அரசுப் பணிகளில் சேருவோருக்கு குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் அவசியம்
அரசுப் பணியில் சேரும் நபர்கள், குறிப்பாகக் குழந்தைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம் சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற வேண்டும் என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா பவுல்ராஜ், இது தொடர்பான அமைச்சரவை ஆவணத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, இந்தச் சான்றிதழைக் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும்.
மேலும், தற்போது அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று குறிப்பிடும் இந்தச் சான்றிதழைப் புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே