ஸ்தம்பித்த 2 கடல் பாதைகள்.. சவுதி முடிவால் ஏறும் பெட்ரோல் விலை?

#prices #LANKA4 #ImportantNews #petrol #saudi #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
ஸ்தம்பித்த 2 கடல் பாதைகள்.. சவுதி முடிவால் ஏறும் பெட்ரோல் விலை?

துபாய்: பெட்ரோல், டீசல் விலை ஏறுமா, இறங்குமா என்று நாம் தினமும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால் அந்த பெட்ரோல் நம்மிடம் வந்து சேர்வது சாதாரண விஷயமில்லை.. கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பல நாடுகளுக்கு செல்கின்றன. 

இப்போது அந்த கப்பல்கள் செல்லும் முக்கியமான 2 பாதைகளில்தான் பிரச்சனை உருவாகியுள்ளது. 

அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!! மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலால் ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஹார்மூஸ் ஏன் முக்கியம் என்றால், உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெயில் பெருமளவு, இந்த பகுதி வழியாகத்தான் செல்கிறது. 

அந்த ரூட்டில் பிரச்சனை என்றால், எண்ணெய் கப்பல்கள் வழக்கம்போல் செல்ல முடியாது. இதனால் கப்பல்கள் வேறு பாதையைத் தேட வேண்டிய நிலை வருகிறது.

அப்படி சுற்றிச்சென்றால் நேரம் அதிகமாகும்... கப்பல் செலவும் அதிகமாகும்.. அத்துடன் காப்பீட்டு செலவும் அதிகரிக்கும்.

கடைசியில் எண்ணெயை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கொண்டு வருவதற்கான செலவு கூடுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில், இதே பிரச்சனைக்கு இன்னொரு முக்கியமான கடல் பாதையும் சிக்கலாகியுள்ளது... ஏமனில் செயல்படும் ஹவுதி படைகள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வருகின்றன.

அவர்கள் மொகா நகரம் மற்றும் பெரிம் தீவு பகுதிகளில் முன்னேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... பெரிம் தீவு இருக்கும் பகுதி செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தப் நீரிணைக்கு அருகில் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4