ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு – மேலதிக சாட்சியப் பதிவு ஒத்திவைப்பு
#SriLanka
#LANKA4
#Case
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவு, எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மோதர மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, மேலதிக சாட்சியப் பதிவை நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே