யால தேசிய பூங்காவின் 02 பகுதிகளை மூட தீர்மானம்

#SriLanka #Yala #National Park #closed #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
யால தேசிய பூங்காவின் 02 பகுதிகளை மூட தீர்மானம்

நிலவும் வறண்ட வானிலை காரணமாக, யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2-வது பகுதிகள் (Blocks) இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இதன்படி, இந்த மூடல் நடவடிக்கை அக்டோபர் 15, 2026 வரை ஒரு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். 

 யால தேசிய பூங்காவானது 44 வகையான பாலூட்டிகள், 215 வகையான பறவைகள், 47 வகையான ஊர்வன மற்றும் 21 வகையான மீன்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது.

பொதுவாக ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியிலேயே இப்பூங்காவிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 

இருப்பினும், தற்போதைய சுற்றுலாப் பருவமானது 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4