அமெரிக்காவுடனான விரிவான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திய கனடா
அமெரிக்காவுடன் விரிவான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை கனேடிய பிரதமர் மார்க் கார்னி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடைநிறுத்தியுள்ளார்.
கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகள் மற்றும் அடுத்த ஆண்டு மேலும் அதிகளவிலான வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்த வர்த்தகம் 1.2 டிரில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. எனினும், தற்போதைய அளவுக்கு பதற்றமான சூழலை தமது பேச்சுவார்த்தைகளில் இதுவரை சந்தித்ததில்லை என இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் எஃகு, மரப்பொருட்கள் மற்றும் வாகன ஏற்றுமதிகளுக்கு ஏற்கனவே அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதும் கனடா வரிகளை விதித்துள்ளது.
முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநரான கோரி டெனெக்கின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட வர்த்தக நிபந்தனைகளில் வாகனங்களுக்கு வரி விதிப்பதும், கனடா பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்காவுக்கு செல்வாக்கு செலுத்தும் உரிமையை வழங்குவதும் அடங்கியிருந்தன.
இத்தகைய நிபந்தனையை ஒட்டாவா ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே