பெண்கள் ஆசிய கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 9வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷாவல் அதிகபட்சமாக 14 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி, பிரேமா அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில், ஷபாலி வர்மா 12 ஓட்டங்களும் ஸ்மிருதி மந்தனா 9 ஓட்டங்களும் ஹர்மன்பிரீத் கவுர் 18 ஓட்டங்களும் குவித்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாத்திமா சனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே