கீழ் மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்!
கீழ் மல்வத்து ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றேன்.
இத்திட்டப் பணிகளை ஆராய்வதற்காக அண்மையில் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன், அதன் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேலும் கலந்துரையாடி பல சாதகமான தீர்வுகளை எட்ட முடிந்தது.
நீர்ப்பாசன கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வலுவான பொருளாதார நிலையை கட்டியெழுப்ப முடியும் என்பதோடு, அவர்களை தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன்.
இத்திட்டத்திற்காக காணிகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயரும் மக்களுக்கு முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்கும் வகையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து மீள்குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் மேலும் சுட்டிக்காட்டினேன்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே