இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

#India #SriLanka #Colombo #Visit
Thamilini
2 hours ago
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார்.

 இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். அத்துடன், பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடனும் அவர் பேச்சு நடத்துவார்.

 இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அடங்கும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4