அரச நிர்வாகத்தை சீர்குலைக்கும் அமைச்சர் சந்திரசேகரம்!

#government #Minister #LANKA4 #ImportantNews #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
அரச நிர்வாகத்தை சீர்குலைக்கும் அமைச்சர் சந்திரசேகரம்!

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பு வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாணuj கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கடல் அட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைuகள், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4