குட்டி நீர்யானைக்கு பெயர் வைக்கலாம் – பொதுமக்களுக்கு அழைப்பு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு பெயர் சூட்டுவதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க மிருகக்காட்சிசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்துள்ள இந்த குட்டி நீர்யானை தற்போது பார்வையாளர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனை முன்னிட்டு, குட்டி நீர்யானைக்கு பொருத்தமான பெயரை பொதுமக்கள் பரிந்துரைக்க முடியும் என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது பெயர் பரிந்துரைகளை மிருகக்காட்சிசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையவழிப் படிவம் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.
விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே