ஹோர்ட்டன் சமவெளியில் புதிய கட்டுப்பாடுகள்!
ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் அழுத்தத்தைக் குறைத்து, அதன் மென்மையான சுற்றாடல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக தினசரி வருகையாளர் வரம்புகளையும் இணையவழி முன்பதிவு முறையையும் அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி தலைமையில் அண்மையில் ஹோர்ட்டன் சமவெளி பூங்காவில் நடைபெற்ற விசேட களப் பரிசோதனை மற்றும் முன்னேற்ற ஆய்வுச் சந்திப்பின்போதே இந்த யோசனைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இணையவழி நேர முன்பதிவு முறைமைமூலம் பூங்காவுக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், முகாமையை மேம்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுற்றாடல் பொறுப்புமிக்க சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டண முறையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான இந்தப் பூங்காவின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே