ஜிம்பாப்வேயில் மினி பஸ் லாரியுடன் மோதியதில் 27 பக்தர்கள் உயிரிழப்பு
#Death
#Accident
#Bus
#LANKA4
#Rescue
#Zimbabwe
#L4
Prasu
4 hours ago
மத்திய ஜிம்பாப்வேயில், தேவாலயப் பக்தர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் ஹராரேவிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் (87 மைல்) தெற்கே உள்ள சிவ்ஹு அருகே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாநாட்டிற்கு வழிபாட்டாளர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ்ஸுடன், ஒரு சரக்கு லாரி மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது மோதியது.
இரு வாகனங்களிலும் 'தெரியாத' எண்ணிக்கையிலான பயணிகள் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாக நிதிப் பற்றாக்குறை மற்றும் புறக்கணிப்பின் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுவதாலும் ஓட்டுநர் தரம் மோசமாக இருப்பதாலும் ஜிம்பாப்வேயில் போக்குவரத்து விபத்துகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே