22’ ஜனநாயகத்திற்கு மரண அடியா? நாடாளுமன்றத்தில் எதிரணி கடும் எதிர்ப்பு!
#SriLanka
#Death
#Parliament
#Sajith Premadasa
#Lanka4
#Opposition
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள் “ஜனநாயகத்தின் மரணத்தைப் பிரதிபலிப்பதாக” எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் கூச்சல் மற்றும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல ஒழுங்குப் பிரச்சினைகளையும் எழுப்பினர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே