சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வு!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இம்முறை யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், நிகழ்வை சுமூகமாகவும் பயனுள்ள வகையிலும் நடத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நீதி அமைச்சு, காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே