கஞ்சிபான் இம்ரானின் நெருங்கிய உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது!

#SriLanka #Arrest #Murder #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கஞ்சிபான் இம்ரானின் நெருங்கிய உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த கஞ்சிபான் இம்ரானின் நெருங்கிய உறவினர் எனக் கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொய்தீன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வன்பொருள் கடை நடத்திவந்த மொஹமட் அஸ்மின் மொய்தீன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (17) 21 முதல் 28 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வசிப்பதாகக் கருதப்படும் ‘குடு அஞ்சு’ என்பவரால் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும், அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவர் அண்மையில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, கஞ்சிபான் இம்ரானை இத்தாலியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் அடுத்த சில நாட்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வரப்படலாம் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4