போதைப்பொருளுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் கைது

#SriLanka #Arrest #government #drugs #Lanka4 #officer #PradeshiyaSabha #L4
Prasu
2 hours ago
போதைப்பொருளுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் கைது

கவர்ச்சிகரமான அரசியலை முன்வைத்து அரசியல் களத்தில் இயங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் ஹெரோயின் போதைப்பொருளுடன் செம்மலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த சொகுசு மகிழ்வூர்தி (Car) ஒன்று இடைமறிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ​

அச்சோதனையின்போது, வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2300 மில்லிகிராம் (2.3 கிராம்) ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் வாகனத்தில் பயணித்த ACMC கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 5 நபர்களும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன், கவனேசன் அனுஷன், மொஹமட் இர்ஷான், மொஹமட் சிபம், மரியசீலன் வசீகரன் ஆகியோர் அடங்குவர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதியே, இளைய தலைமுறையை அழிக்கும் கொடிய ஹெரோயின் கடத்தலில் பிரதான சூத்திரதாரியாக சிக்கியிருப்பது அக்கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 

மக்கள் வழங்கிய அதிகாரத்தையும் பதவியையும் கேடயமாகப் பயன்படுத்தி போதைப்பொருள் வலைப்பின்னலை முன்னெடுத்துள்ள இத்தகைய செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

​கைது செய்யப்பட்ட உப தவிசாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் மகிழ்வூர்தியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4