எழுவைதீவில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை அமைப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்!
எழுவைதீவில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபையை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல், அப்பகுதி மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கருத்துகள் நேரடியாகக் கேட்டறியப்பட்டன.
மக்களுடன் இணைந்து செயற்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான முக்கிய முயற்சியாக இந்தக் கலந்துரையாடல் அமைந்தது.
அடிமட்டத்திலிருந்து ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்தி, மக்கள் நலனை முன்னிறுத்திய ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், யாழ். மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே