73 பாதாள உலகக் குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில், சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை எதிர்வரும் நாட்களில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டி எசல பெரஹரா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டவிரோத நடவடிக்கைளுக்கு நிதியுதவியும் ஆதரவும் அளித்தவர்கள் தற்போது கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும், இந்தச் சோதனைகளை நிறுத்துமாறு எவ்வித வெளி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே