சிறுவர் துஷ்பிரயோக குற்றங்கள் - பெற்றோருக்கு சிறை தண்டனை

#SriLanka #children #Prison #Abuse #Lanka4 #Parents #L4
Prasu
3 hours ago
சிறுவர் துஷ்பிரயோக குற்றங்கள் - பெற்றோருக்கு சிறை தண்டனை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு (NCPA) கிடைக்கும் சிறுவர்களைக் கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் போன்ற குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபை கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர், சட்டத்தரணி சஜீவனி அபேகோன், தற்காலத்தில் மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கைவிடுதல் தொடர்பான முறைப்பாடுகள் தமக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தண்டனைச் சட்டக்கோவையின் (Penal Code) விதிகளுக்கு அமைவாக, இத்தகைய குற்றங்களைச் செய்யும் பெற்றோருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4