கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமன ஆணைகள் இரத்துக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

#India #Case #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமன ஆணைகள் இரத்துக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழகத்தின் கரூர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகள் இரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (14) இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும், குறித்த நியமன ஆணைகளை இரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (14) உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!