உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு - ஆணையாளர் நாயகம் விளக்கம்
அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவுள்ள பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
"வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை.
அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்" என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்குறிப்பிட்ட வதந்திகளை நம்பாமல் நாளை இடம்பெறவுள்ள பரிட்சைக்கு மாணவர்கள் வருகை தருமாறு இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே