டெங்கு மரணங்கள் அதிகரிப்பு – நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது!

#SriLanka #Death #Lanka4 #Dengue #Patients #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
டெங்கு மரணங்கள் அதிகரிப்பு – நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 53 சதவீதமானோர் (48,244 பேர்) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களும் டெங்கு தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான புதிய டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4