நாட்டில் தனிநபர் மாதாந்த செலவில் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, குறைந்தபட்ச உணவு மற்றும் உணவு அல்லாத நுகர்வுப் பொருட்களுக்கான செலவினத்தை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகபூர்வ வறுமைக் கோடு மாதாந்தம் கணக்கிடப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் இது 17,315 ரூபாயாக காணப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 277 ரூபாயால் அதிகரித்துள்ளது.
மாவட்ட ரீதியான தரவுகளின்படி, நாட்டிலேயே அதிகபட்ச உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் 18,973 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 18,876 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டிலேயே குறைந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் 16,821 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே