கிராமிய வீதி அபிவிருத்திக்கு முன்னுரிமை! இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு

#SriLanka #Project #Lanka4 #President #suspend #AnuraKumaraDissanayake #Devolopment #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிராமிய வீதி அபிவிருத்திக்கு முன்னுரிமை! இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு

கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின்போதே இந்த பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

மேலும், அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, பொதுமக்களுக்கு திறமையான மற்றும் வசதியான போக்குவரத்து கட்டமைப்பை வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4