ஐ.நா. உயர்மட்ட பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் சந்திப்பு!
#SriLanka
#UN
#Minister
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகளின் உலகளாவிய உடன்படிக்கையின் (UN Global Compact) பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Sanda Ojiambo உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை அலரி மாளிகையில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய–பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் “Forward Faster Now 2026” திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் SDG முதலீட்டு மாநாட்டை முன்னிட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொறுப்புமிக்க முதலீட்டுக் கோட்பாடுகள் (PRI), ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்ட நிதி முன்முயற்சி (UNEP FI) மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஆகியவற்றின் இணைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே