கொலம்பியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 240 ஆக உயர்வு

#Death #Earthquake #Lanka4 #Rescue #Colombia #Missing #L4
Prasu
2 hours ago
கொலம்பியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 240 ஆக உயர்வு

உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

கொலம்​பி​யா​வின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மைய​மாகக் கொண்டு நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்​டர் அளவில்7.4 ஆகப் பதி​வானது. 

இந்த பூகம்​பகத்​தால் சான் ஹோசே டெல் பால்​மர், கலி, பெரே​ரா, மனி​சாலெஸ் உள்​ளிட்ட நகரங்​களில் ஏராள​மான கட்​டிடங்​கள் இடிந்து விழுந்​தன. 

இதில் இதுவரை சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 570 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். 

கட்​டிட இடிபாடுகளில் ஆயிரக்​கணக்​கானோர் சிக்கி உள்ளனர். அவர்​களை மீட்க ராணுவ வீரர்​கள் களமிறக்​கப்​பட்டு உள்​ளனர். அங்கு மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4