கடற்சீற்றத்தால் முல்லைத்தீவு மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (11.08.2026) காலை திடீரென ஏற்பட்ட கடற்சீற்றம் காரணமாக, கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல்நீர் உட்புகுந்ததையடுத்து, மீனவர்களின் வாடிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், அவர்களின் அன்றாட மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மீனவர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இதன்போது, கடற்சீற்றம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய மேலதிக பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் மீனவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும், கடலின் நிலைமையைத் தொடர்ந்து அவதானித்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே