கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம்: அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா இணையும் மாஸ் கூட்டணி!
#India
#Cinema
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா, நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா அத்துடன் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுமையான களத்துடனும் வித்தியாசமான கதைக்களத்துடனும் உருவாகவுள்ள இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நட்சத்திர கூட்டணியில் உருவாகும் குறித்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே