இந்திய சினிமாவை ஆளும் டாப் நடிகைகள்: சம்பளம் & செல்வாக்கு தரவரிசைப் பட்டியல்!

#India #Cinema #TamilCinema #samantha #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
இந்திய சினிமாவை ஆளும் டாப் நடிகைகள்: சம்பளம் & செல்வாக்கு தரவரிசைப் பட்டியல்!

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, வேதனம், வீட்டின் மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் சிற்றூர்ந்து மற்றும் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.

அந்த வகையில், இந்திய திரையுலகில் தற்போதைய நிலவரப்படி அதிக செல்வாக்கும், உயர்ந்த வர்த்தக நாம மதிப்பும் கொண்ட முன்னணி 10 நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் எதிர்பார்த்தது போலவே பொலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஆலியா பட் முதலிடத்தில் இருக்கிறார். 

தற்போது படங்கள் தாண்டி விளம்பரங்களிலும் ஆலியா பட் ஜொலித்து வருகிறார்.

இவர் 20க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்களின் விளம்பரத் தூதராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 2ஆம் இடத்தில் தீபிகா படுகோனே, 3ஆம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 4ஆம் இடத்தில் கரீனா கபூர், 5ஆம் இடத்தில் கியாரா அத்வானி ஆகியோர் உள்ளனர்.

 6 முதல் 10 வரையிலான இடங்களில் முறையே கீர்த்தி சனோன், அனன்யா பாண்டே, சமந்தா, தமன்னா, ஜான்வி கபூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து சமந்தா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!