ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை

#LANKA4 #Iran #World #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Lakhi
1 month ago
ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை

ஈரான் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்து வந்தாலும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு உத்தரவிடுவதைத் தவிர்த்து, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தற்போதைய நடவடிக்கைகளை அமெரிக்கா வழக்கமான முறையில் கையாள்வதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அந்நாட்டில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானிடம் போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனை பயன்படுத்தி அந்நாட்டின் மீது பொருளாதார ரீதியான அழுத்தத்தை மேலும் அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 

இதன் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் போரின் காரணமாக அமெரிக்க நுகர்வோர் பெருமளவில் பாதிக்கப்படும் அளவிற்கு அமெரிக்காவில் எண்ணெய் விலைகள் உயரவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!