கேரளாவில் கணவரின் கொடுமை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை

#Death #Women #drugs #Lanka4 #Kerala #L4
Prasu
2 hours ago
கேரளாவில் கணவரின் கொடுமை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை

கேரளாவில் கணவரின் கொடுமை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் 8 மாத மணப்பெண் தவறான முடிவு செய்துகொண்ட சம்பவம் கண்ணூரின் வளப்பட்டணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஜனவரி 8 அன்று ஆசிப் என்பவர் 20 வயது ரிசா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

திருமணத்தை தொடர்ந்து துபாய் சென்ற ரிசாவை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கிய கணவர் ஆசிப் உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரிசா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார், மேலும், அவரது உடையில் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

தற்போது ஆசிப் மீது வளப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்றே வெளிநாட்டிற்கு தப்பிய கணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4