கலிபோர்னியாவில் பரபரப்பு: டிரம்ப் வருகைக்கு முன் கோல்ஃப் மைதானத்தில் சந்தேகநபர் கைது!

#ARREST #LANKA4 #World #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Lakhi
1 month ago
கலிபோர்னியாவில் பரபரப்பு: டிரம்ப் வருகைக்கு முன் கோல்ஃப் மைதானத்தில் சந்தேகநபர் கைது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிபோர்னியாவில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்திற்கு வருவதற்கு முன்னதாக, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் மைதானத்தில் 38 வயதுடைய ஜீனைன் ஜான் டேல் என்பவர் கைது செய்யப்பட்டதாக லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி ஷெரிப் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கோல்ஃப் மைதான வளாகத்தில் சுற்றித் திரிந்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பது போன்று நடந்து கொண்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்ட கைத்துப்பாக்கி, சட்டவிரோத தோட்டாக்கள் மற்றும் மேகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவரது வாகனத்திலிருந்தும் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் ஏற்கனவே மற்றொரு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க ரகசிய புலனாய்வுச் சேவை ஆதரவுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அதிபர் டிரம்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!