ஈரானின் இரட்டை வேடம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

#LANKA4 #President #World #Accusation #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Lakhi
1 month ago
ஈரானின் இரட்டை வேடம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவித்த நிலையில், அதற்கு முரணான விளக்கத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், தற்போது ஓமானுடன்தான் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் நோக்கில், தற்காலிகக் கடற்பாதை அமைப்பது தொடர்பாக ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் விளக்கியுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் தலைமையின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

இந்த பரஸ்பர முரண்பட்ட கருத்துகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!