அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை - ஈரான் திட்டவட்டம்!
#SriLanka
#Iran
#Peace
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஹோர்முஸ் ஜலசந்தி இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்பவில்லை என்றும் ஈரான் நேற்று அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல் திடீரென இடைநிறுத்தப்பட்ட நிலையில், தெஹ்ரானும் தாக்குதல்களை நிறுத்தியது.
இதனையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படலாம் என ஊகங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த ஈரான் மேற்படி அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் குண்டுவீச்சு நடவடிக்கை முடிவுக்கு வந்ததால், தடைபட்டிருந்த உலகளாவிய விநியோகம் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையில் எண்ணெய் விலைகள் சரிந்தன.