அமெரிக்காவின் ஏரியா - 51இற்கு மேற்கில் காட்டுத்தீ பரவல்!! மக்கள் வெளியேற உத்தரவு!

#SriLanka #America #WildFire #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Area 51
Thamilini
1 month ago
அமெரிக்காவின் ஏரியா - 51இற்கு மேற்கில் காட்டுத்தீ பரவல்!! மக்கள் வெளியேற உத்தரவு!

நெவாடாவின் லிங்கன் கவுண்டியில், ஏரியா 51-க்கு வடமேற்கே 2,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக அமெரிக்க தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

தீ ஏற்பட்டதற்கான காரணம் அல்லது தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலை குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

அவசரக்கால மீட்புக் குழுவினர் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், கலிபோர்னியாவின் டுவோலம்னே கவுண்டியில், நேற்று காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வேகமாகப் பரவும் காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றப்பட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 ஹெக்டேயர் பரப்பளவிற்கு தீ பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!