கனடாவில் சிறுவர் பாலியல் வீடியோ: இலங்கை வைத்தியர் கைது!

#SriLanka #Canada #Lanka4 #Video #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
கனடாவில் சிறுவர் பாலியல் வீடியோ: இலங்கை வைத்தியர் கைது!

ரோரன்ரோ நகரில் உள்ள பிரபல SickKids (The Hospital for Sick Children) குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் டிலான் திஸாநாயக்க - வயது 44, குழந்தைகள் துஷ்பிரயோக வீடியோக்கள் தொடர்பாக கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோரன்ரோ பொலிஸின் இணையவழி குழந்தை சுரண்டல் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, மின்னணு சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களை இணையத்தில் இருந்து அவர் பெற்றதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு பெப்ரவரி மாதம் அவரின் வீடு அவர் பணியாற்றி வந்த SickKids வைத்தியசாலை வளாகம் ஆகியன சோதனை செய்யப்பட்டன.

அந்த சோதனைகளின்போது, அவரது கணினி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களை வைத்திருந்தமை அவற்றை இணையத்தில் பெற்றமை மேலும், குறித்த குற்றச்சாட்டுகள் மருத்துவரின் மருத்துவப் பணிகளுடனோ அல்லது அவர் சிகிச்சை வழங்கிய நோயாளிகளுடனோ தொடர்புடையவை என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக SickKids மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவலால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாகவும், குறித்த மருத்துவரை உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 டிலான் திஸாநாயக்க, ரோரன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணை பேராசிரியராகவும் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ள

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4