பதவியேற்ற உடனே வட் வரியை நீக்குவதாக அறிவித்த பிரித்தானிய பிரதமர்
#PrimeMinister
#people
#government
#Lanka4
#England
#Vat
#L4
Prasu
12 hours ago
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மற்றும் நிதி அமைச்சர் ஜான் ஹீலி ஆகியோர் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் வாழ்க்கைச் செலவுச் சுமையால் சிரமப்படும் குடும்பங்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மாற்றத்தால், ஆண்டுதோறும் விதிக்கப்படும் ஆஃப்கெம் (Ofgem) விலை உச்சவரம்பு சுமார் £45 பவுண்ட்ஸ் வரை குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சேமிப்பை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவுக்கு புதிய அரசியல் மற்றும் பொருளாதார மாதிரியை அமைப்பதாக பர்ன்ஹாம் வாக்குறி வழங்கியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே