இஸ்ரேலியப் பிரதமரின் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
#PrimeMinister
#ARREST
#America
#Israel
#LANKA4
#President
#Netanyahu
#L4
#DonaldTrump
Prasu
2 months ago
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும் போது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்காவில் இருக்கும் போது எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் கைது செய்யப்பட மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நெதன்யாகு வருகை தந்தால், அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்து நகர அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்திருந்தார்.