மந்திகை பகுதியில் விபத்து - படுகாயம் அடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#Jaffna
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
9 hours ago
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை மக்கள் வாங்கிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தித்தில் வயோதிபர் ஒருவர் படுக்காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென வீதிக்கு குறுக்காக கடக்க முற்பட்ட வாயோதிபர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே