கிளிநொச்சி - பரந்தன் கிராமத்தில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராமத்தில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த 704 பயனாளிகளுக்கான விரிவான வீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதில் பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் மாத்திரம் சுமார் 52 வீட்டுத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், பகுதியளவில் சேதமடைந்த 15 வீடுகளை முழுமையாகப் புனரமைப்பதற்காக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
இது தொடர்பாகப் பயனாளிகளுக்குப் புதிய வீட்டுத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பரந்தன் கிராம அலுவலர் அலுவலகத்தில் பயனாளிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பயனாளி ஒருவரது புதிய இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் ஒருங்கிணைப்பாளர் சுஜிபன், பரந்தன் கிராம அலுவலர் அஜித் மற்றும் வீட்டுத்திட்ட பயனாளிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே