காட்டுத்தீ விவகாரத்தில் கனடா மீது அதிக வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல்
கனடாவில் ஏற்படும் காட்டுத்தீயினால் உண்டாகும் காற்று மாசுபாட்டிற்கான செலவை, அந்நாடு தற்போது செலுத்தும் சுங்க வரிகளுடன் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதாலேயே, மாசடைந்த காற்று அமெரிக்கப் பகுதிக்குள் நுழைகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், "தனது காடுகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதற்காக கனடாவைப் பொறுப்பாக்குகிறது" என்று அமெரிக்கா கருதுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இதை "வேண்டுமென்றே செய்யப்படும் அலட்சியம்" என்று குறிப்பிட்டார்.
இது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வாகிவிட்டதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே