வயிற்றில் போதை மாத்திரைகளுடன் கட்டுநாயக்கா வந்திறங்கிய அங்கோலா பெண் கைது!

#SriLanka #ARREST #Airport #Women #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
வயிற்றில் போதை மாத்திரைகளுடன் கட்டுநாயக்கா  வந்திறங்கிய அங்கோலா பெண்  கைது!

10 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டி்  அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண்  அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிற்கு வந்து, அங்கிருந்து கட்டாரின் தோஹா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் அவர் சக்கர நாற்காலியின் உதவியுடன் விமான நிலைய முனையத்தை நோக்கி பயணித்துள்ளதுடன், இதன்போது அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது அவர்  கொக்கேய்ன் போதைப்பொருள் அடங்கிய 14 மாத்திரைகளை (Capsules) சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். 

 இதுதவிர, மேலும் சில போதைப்பொருள் மாத்திரைகளை தான் விழுங்கியுள்ளதாகவும் அந்தப் பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!