முன்பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றம்: சர்வதேசத் தரத்திற்கு உயர்கிறது இலங்கை!

#SriLanka #School #International #students #education #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY
Abi
2 months ago
முன்பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றம்: சர்வதேசத் தரத்திற்கு உயர்கிறது இலங்கை!

இலங்கையின் முன்பள்ளிக் கல்வித் துறையை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்கும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் புதிய 'முன்பள்ளி ஆசிரியர் கையேடு' மற்றும் 'மாதிரி செயல்பாட்டு நூல்' ஆகியன வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 35,000-ற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களை ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாட்கள் கொண்ட விசேட பயிற்சிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கல்வி மறுசீரமைப்புகள் அனைத்தும் 2027 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளதுடன், இதற்கான தேசியக் கொள்கை அடுத்த ஆண்டுக்குள் சட்டமாக இயற்றப்படவுள்ளது.

முன்பள்ளிச் சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், நாட்டின் 'தண்டனைச் சட்டக்கோவை' திருத்தப்படவுள்ளது.

சிறுவர்களை அச்சமூட்டி தண்டிக்கும் பழைய முறைகளுக்குப் பதிலாக, 'நேர்மறை ஒழுக்கத்தை' அவர்களிடம் வளர்க்க வேண்டும் என அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் எதிர்காலச் சந்ததியான சிறுவர்களின் பாதுகாப்பை எந்நேரமும் உச்சக்கட்டமாக உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!