கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி தீ விபத்தில் பலி
கனடாவின் எட்மண்டன் நகரில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 85 வயது மேஜர் சிங் பந்தலும் 82 வயது சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும்வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது. வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.
வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் பிழைக்கவில்லை.
அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே