அர்ச்சுனா எம்பியினால் அமைதியின்மை - அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்

#SriLanka #Police #Meeting #Kilinochchi #government #ImportantNews #Official #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY
Abi
2 months ago
அர்ச்சுனா எம்பியினால் அமைதியின்மை - அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டம் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, மாவட்ட அரசாங்க அதிபர் திரு சு. முரளிதரன் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்துகொண்டஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள், பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அரச அதிகாரிகள் ஒருமித்த முடிவாக வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூட்ட இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு சு. முரளிதரன் நேர்மையும் நிர்வாகத் திறனும் கொண்ட அதிகாரியாக உள்ளூர் மக்களால் மதிக்கப்படுபவர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!