யாழில் இளைஞனைக் கடத்தி சித்திரவதை செய்த 5 பேர் கத்தியுடன் கைது:

#SriLanka #Jaffna #Arrest #Young #Lanka4 #Kidnap #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
1 hour ago
யாழில் இளைஞனைக் கடத்தி சித்திரவதை செய்த 5 பேர் கத்தியுடன் கைது:

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் நின்ற இளைஞனை கார் ஒன்றில் வந்த கும்பல் நாவற்குழி பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளது. அங்கு அவரது ஆடைகளைக் களைந்து, கூரிய ஆயுதங்களால் தாக்கிச் சித்திரவதை செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீண்டும் காரில் ஏற்றி வந்து, பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் வீதியில் வீசிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இதனை அவதானித்துச் தப்பியோடிய காரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

காரில் இருந்த 5 பேரைக் கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்து இரண்டு கூரிய வாள்கள், இரத்தக்கறை படிந்த டி-சர்ட் மற்றும் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். 

காரின் உட்பகுதியிலும் இரத்தக்கறைகள் காணப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4