1000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரித்தானியாவிற்கு கொண்டு வரப்பட்ட பேயக்ஸ் திரைச்சீலை
சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பேயக்ஸ் திரைச்சீலை, முதல் முறையாக இங்கிலாந்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து ஒரு காவல்துறைப் பாதுகாவலரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட அது, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சரக்கு ஏற்றும் தளத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த திரைச்சீலை செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 மீட்டர் நீளமுள்ள 11 ஆம் நூற்றாண்டின் இந்த எம்பிராய்டரி, 58 காட்சிகளில், 1066 ஆம் ஆண்டில் நடந்த ஹேஸ்டிங்ஸ் போர் மற்றும் இங்கிலாந்தின் நார்மன் படையெடுப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது.
அலுமினியச் சட்டகத்தில் அடைக்கப்பட்ட, கனமான தோற்றமுடைய அந்தப் பெட்டி, இங்கிலாந்துக்கான பிரெஞ்சுத் தூதர் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் லாரியிலிருந்து கீழே இறக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே